ED Raid: அமைச்சர் துரைமுருகன் வீடு... அதிகாலை 2.30 மணிக்கு முடிவுக்கு வந்த ரெய்ட...
BB Tamil 8: பிக் பாஸ் கொடுத்த ட்விஸ்ட்; அதிர்ச்சியில் போட்டியாளர்கள்; என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 87 வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், விஷால், மஞ்சரி, ராணவ், அருண், பவித்ரா, ரயான், ஜாக்குலின் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில் 5வது டாஸ்க் கடுமையாகக் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கில் தோல்வியைத் தழுவினால் போட்டியாளர்கள் இனி வரும் டிக்கெட் டு ஃபினாலேயின் மற்ற டாஸ்க்களில் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிக் பாஸின் இந்த அறிவிப்பு போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.