BB Tamil 8: `நேற்றெல்லாம் எனக்கு எவ்வளவு மன உளைச்சல் தெரியுமா?’ - கடுப்பான முத்துக்குமரன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 89வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன், ரயான் இடையே மோதல்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் ராயன் முத்துக்குமரன் குறித்து சௌந்தர்யாவிடம் கூறுகிறார்.
'நேற்று பவித்ராவை வைத்து மூன்று பேரும் பேசிட்டு இருந்தாங்க. இன்னைக்கு அருண்கிட்ட பேசிட்டு இருக்காங்க. எதாச்சும் ஒரு சிறிய விஷயம் கிடைக்காதா? பெரிய விஷயமாக மாத்துறதுக்கு என்று திட்டம் போடுறாங்க. ஜாக்குலின், மஞ்சரி ஒருநாளைக்கு முன்னாடிதான் நமக்காக பேசிட்டு இருந்தாங்க. முத்து மொத்தமா ஒவ்வொரு விஷயத்தையும் மாத்தி மாத்தி பேசுறாரு' என்று சொல்கிறார். 'எனக்கு ரயான் இப்போ வேற யாரோ மாதிரி தெரியுறான்' என்று மஞ்சரி சொல்ல, `நேற்றெல்லாம் எனக்கு எவ்வளவு மன உளைச்சல் தெரியுமா? என்று முத்துக்குமரன் புலம்புகிறார்.