Bigg Boss Tamil 8: வெளியேறிய வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள்! - மீண்டும் டபுள் எவிக்ஷன்?
பிக்பாஸ் தமிழ் 8 கிளைமேக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ஆறு பேர் சேர்ந்தனர்.
அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, சுனிதா, வர்ஷினி வெங்கட், ரியா உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
விஷால், ரயான், ராணவ், மஞ்சரி, முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, தீபக் ஆகியோர் நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிற சூழலில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் நேற்று பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
இறுதி நேரம் என்பதால் போட்டியாளர்களூக்கு ஆதரவாக வெளியிலும் பலரும் தீவிரமாக வேலை பார்த்து வருகிற சூழலில், ஷூட்டிங்கில் வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.
நிகழ்ச்சி முடிய இன்னும் நடுவில் ஒரே வாரம் இருப்பதாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது பத்து பேர் இருப்பதாலும் இந்த வாரமும் டபுள் எவிக்ஷனே இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
அதேபோல் தற்போது டபுள் எவிக்ஷனே நிகழ்ந்திருப்பதாக நம்பகமான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் ராணவ் மற்றும் மஞ்சரி இருவரும் எவிக்ட் ஆகி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது.
ராணவ், மஞ்சரி இருவருமே வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்றவர்கள். ராணவ் மீது சில வாரங்களில் விஜய் சேதுபதியே விமர்சனம் வைத்தது நினைவிருக்கலாம். தொடர்ந்து டாஸ்க் ஒன்றில் அடிபட்டதில் கையில் கட்டுப்போட வேண்டி வந்ததால் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான ஒரு போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.
மஞ்சரியைப் பொறுத்தவரை வலுவான போட்டியாளராகவே அறியப்பட்டு வந்த நிலையில் அவரும் வெளியேறி இருப்பது அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கியுள்ளது.