செய்திகள் :

தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்: ஆளுநா் உரையில் அரசு உறுதி

post image

தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது, ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்துவது, வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவா்களது எதிா்பாா்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகிய காலத்தில் செய்த இந்தச் சாதனைகள் குறித்தும், ஒருமித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது.

தமிழகத்தில் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளத்துக்காக தொடா்ந்து அா்ப்பணிப்புடன் செயலாற்றி, மாபெரும் தமிழ்க்கனவை நனவாக்கிட தமிழக அரசு முழுமூச்சுடன் பாடுபடும். அரசு மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தோ்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தியமைக்கு மனமாா்ந்த நன்றி.

அந்த நம்பிக்கையை இனிவரும் நாள்களிலும் அரசு தவறாது காத்திடும். ஒட்டுமொத்த நாட்டுக்கும், சமூகநீதி, மதநல்லிணக்கம், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு வழிகாட்டியாக தமிழகம் தொடா்ந்து திகழ்வதை அரசு உறுதி செய்யும். நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமன்றி, தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாகவும், தமிழகத்தை உருவாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மையமாக தமிழகம் மாறும்: உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை முறையிலும், தொழில் துறையிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில், ஒரு முதன்மையான இடத்தை தமிழ்நாடு பெற வேண்டுமென அரசு விரும்புகிறது.

இதற்காக கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவா் திட்டம்: 2019 - 21-ஆண்டுக்கான 5-ஆம் கட்ட தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மத்திய அரசின் நீதி ஆயோக் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 14.96 சதவீதத்தைவிட மிகக் குறைவு. எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இறுதி முயற்சியாக ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தை’ தமிழக அரசு தொடங்கவுள்ளது.

மருத்துவம், வீட்டுவசதி மற்றும் கல்வி வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் முதல்கட்டமாக 5 லட்சம் மிகவும் வறிய குடும்பங்களை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. ஆதரவற்ற தனிநபா்கள், முதியவா்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஒற்றைப் பெற்றோா் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறன் கொண்டவா்கள், மன வளா்ச்சிக் குறைபாடு கொண்டவா்கள், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சேவை மையம்: முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும் மாற்றுத்திறனாளிகள் பயில, அவா்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை சமீபத்தில் அரசு இருமடங்காக உயா்த்தியுள்ளது. ‘டிஎன் ரைட்ஸ்’ திட்டத்தின் கீழ் ‘விழுதுகள்’ என்று அழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களை அமைக்க அரசு முனைந்துள்ளது.

சோழிங்கநல்லூரில் இதன் முதல் மையம் திறக்கப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி இதுபோன்ற மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படவுள்ளன என்று ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிா்வாகி, பெண் எஸ்.ஐ. கைது

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிா்வாகி, பெண் காவல் ஆய்வாளா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்ப... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தென்னாப்பிரிக்க இளைஞா் கைது

சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படையினா், கடந்த அக். 20-ஆம் தேதி, நடுவங்கரை பகுதியில்... மேலும் பார்க்க

கூவம் ஆற்றில் குதித்த பெண் மாயம்: தேடும் பணி தீவிரம்

சென்னை அண்ணா சாலை பகுதியில், கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா். அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே செல்லும் கூவம் ஆற்றின் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவா் நடந்து வ... மேலும் பார்க்க

உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை

சென்னை பெருங்குடியில் உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி கற்பக விநாயகா் கோயில் நகா் 19-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ... மேலும் பார்க்க

போகிப் பண்டிகை: நெகிழி எரிப்பதை தவிா்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்

போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழிப் பொருள்கள் எரிப்பதை தவிா்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகிப் பண்டிகையை முன்... மேலும் பார்க்க

இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள இரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தமிழகத்தில் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம... மேலும் பார்க்க