சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
இயக்குநர் ஷங்கர் திரைப்படங்கள் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: குபேரா வெளியீடு எப்போது?
ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரணுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார பிரச்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் டிரைலர் காட்சிகளும் அதை உறுதிபடுத்தியுள்ளன.
இந்த நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், “ ராம் சரண் எனக்கு சகோதரன் மாதிரி. சிறுவயதிலிருந்தே மிகவும் ஒழுக்கமான, பொறுப்பான ஆளாக வளர்ந்தவர். அவரின் கேம் சேஞ்சர் வெற்றியைப் பெற வேண்டும். நான் சென்னையிலிருந்த காலத்தில் அதிகமாக திரையரங்குகளுக்குச் செல்ல மாட்டேன். ஆனால், இயக்குநர் ஷங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் வாங்கிப் பார்த்தேன். அவர் இயக்கிய காதலன் படத்தை என் பாட்டியுடன் சென்று கண்டுகளித்தேன்.” என தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.