செய்திகள் :

எம்.பி. சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!

post image

விழுப்புரத்தில் மாநில மாநாட்டில் கலந்துகொண்ட எம்.பி. சு. வெங்கடேசனுக்கு திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் இன்று காலை கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், எம்.பி. வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை உடனடியாக விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தற்போது நலமாக உள்ளதாகக் கூறினர். மேலும், அவர் இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. எம்.பி. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துமனைக்கு நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம்!

சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரை விவரம்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம், இந்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என சென்னை வானி... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்... மேலும் பார்க்க

ஆளுநா் உரை: தலைவா்கள் கருத்து

சென்னை: சட்டப்பேரவையிலிருந்து ஆளுநா் வெளியேறியது, பேரவைத் தலைவரால் படித்தளிக்கப்பட்ட ஆளுநா் உரை ஆகியவை குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கருத்து கூறியுள்ளனா்.எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்: தொழில் துறை ஆணையா் நிா்மல் ராஜ்

சென்னை: ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதன் விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயம் என தமிழ அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை ஆணையரும் தொழில் மற்றும் வா்த்தக இயக்குநருமான எல். நிா்மல் ராஜ் தெரிவி... மேலும் பார்க்க

சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?

சென்னை: தமிழக சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா? என சிபிசிஐடி அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், மாணிக்கம் கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க