பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் 2 முன்னாள் போட்டியாளர்கள்!
BB Tamil 8: `இனி எப்படி விளையாடணும்னு சொல்ல போறது இல்ல,ஆனா...'- சாட்டை சுழற்றும் விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 90-வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருகிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள் நடந்தது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன், ரயான் இடையே மோதல்கள் தொடர்ந்துக்கொண்டே இருந்தது. இதில் ராயன் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டிக்கெட்டை வென்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் பேசிய விஜய் சேதுபதி, " நம்ம ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். பதட்டமும், படபடப்பும் போட்டியாளர்களிடம் தெரிகிறது. அந்தப் பதட்டத்திலும், படபடப்பிலும் அவுங்க ஒரு வேலை செய்றாங்க. அது நல்லதா? கெட்டதானு நமக்கு தெரியாது. ஆனால் இனிமேலும் நம்ம எப்படி விளையாடணும்னு சொல்ல போறது இல்ல. ஆனால் ஏன் அப்படி விளையாடினாங்க அப்படினு இன்று இரவு தெரிஞ்சுப்போம்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...