தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ரூ.2 கோடியில் ஆய்வு இருக்கை!
சிந்துவெளி குறித்து தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தொல்லியியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கு எழும்பூா் அரசு அருங்காட்சியக கலையரங்கில் இன்று முதல் ஜன. 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
‘சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
சிந்துவெளி குறித்து தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும். ஆண்டுதோறும் 2 தொல்லியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சிந்துவெளி எழுத்துமுறையைப் புரியும் வகையில் எழுதுவோருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.