நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
பனிமூட்டம்: ஸ்ரீநகரில் 10 விமானங்கள் ரத்து
பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 50 மீட்டர் மீட்டா் தொலைவு வரை மட்டுமே தெளிவான காண்புநிலை இருந்தது.
விமானங்களை இயக்குவதற்கு 1000 முதல் 2,000 மீட்டா் தொலைவுக்கு தெளிவான காண்புநிலை இருக்க வேண்டும்.
இதனால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் காலை 10 மணிக்குப் பிறகே புறப்பட்டன என்று விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எம்.பி. சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி!
பின்னர் காண்புநிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும் இதுவரை 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சனிக்கிழமையும் விமான நிலையத்தில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால் ஒருசில விமானங்கள் தாமதமாக புறப்பட்டதோடு மாற்று விமான நிலையங்களுக்கும் திருப்பி விடப்பட்டன.