BB Tamil 8: 'குறுக்க வராத' - டிக்கெட் டு ஃபினாலேவில் ஓயாத முத்துக்குமரன் - ரயான் மோதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 88 வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவுக்கான டாஸ்க்குகள்தான் நடைபெற்று வருகிறது. இதனால் கடுமையான போட்டிகளும், வாக்குவாதங்களும் போட்டியாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றன. முத்துக்குமரன், ரயான், ஜாக்குலின் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் இரண்டாவது புரோமோவில் பவித்ரா, மஞ்சரி இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.
தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில், 'கும்பலாக சேர்ந்து இரண்டு பேரை அட்டாக் பண்ணும்போது அது நல்லா இல்ல ஜாக் என்று பவித்ரா சொல்ல 'பாயிண்ட்ஸ் டேபிளில் யார் அதிகமா இருக்காங்கனு பார் பவி' என்று ஜாக்குலின் சொல்கிறார்.
அப்போது முத்துக்குமரன் வந்து கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கையில் 'பார்க்கிறவர்களுக்கு தெரியும்' என்று பேச ஆரம்பித்தார் ரயான். உடனே 'குறுக்க வராத ரயான்' என்று முத்துசொல்ல 'ஒரு சபையிலே வச்சுப்பேசுனா நான் பேசுவேன்.
உனக்கு வேணும்னா தனியாப்போய் பேசு' என்று கூறுகிறார். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் தொடங்கியதில் இருந்தே முத்துக்குமரன்- ரயான் மோதல் ஓயவில்லை.