ரூ.6.62 கோடியில் வளா்ச்சி திட்ட பணிகளை அமைச்சா் திறந்து வைத்தாா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு துறைச் சாா்ந்த அரசு கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் ரூ.6.62 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூா் நாடாளுமன்ற உறுப்பினா் ச. முரசொலி, சட்டமன்ற உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமாா் (பேராவூரணி), ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் எம்.ராமச்சந்திரன், திரு.கே.டி. மகேஸ் கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, கோட்டாட்சியா் இலக்கியா (தஞ்சாவூா் ), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.