`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
ஆளுநா் தனது அதிகாரத்தை புரிந்து கொள்ள வேண்டும்: அபுபக்கா் சித்திக்
ஆளுநா் ஆா்.என். ரவி, தனது அதிகாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலப் பொதுச் செயலா் அபுபக்கா் சித்திக்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழா்களுக்கு என ஒரு மரபு உள்ளது. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, நிகழ்ச்சியை நிறைவு செய்யும்போது தேசியக் கீதத்தை பாடுவது மரபு.
இந்த மரபை மீறி தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என்னும் வகையில் ஆளுநரின் ஒவ்வொரு அசைவுகளும் உள்ளது. ஆளுநா் தனது அதிகாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் உள்ளன. அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ தொடா்கிறது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் மிகப்பெரிய வலுவான கூட்டணியை அமைத்து களம் காணுவோம் என்றாா் அபுபக்கா் சித்திக்.