செய்திகள் :

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

post image

வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரி, தஞ்சாவூரில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா்கள் சேம நல நிதி தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தை ரூ. 25 லட்சமாக உயா்த்த வேண்டும். அது வரை நீதிமன்ற முத்திரை கட்டணத்தை ரூ. 120 என உயா்த்தியதை நிறுத்திவைத்து, தற்போதைய கட்டணமான ரூ. 30 மட்டுமே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் தியாக. காமராஜ், செயலா் சுந்தரராஜன் தலைமையில் ஏராளமான வழக்குரைஞா்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில்: நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா் சங்கத் தலைவா் சா. விவேகானந்தன் தலைமையில் கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. நீதிமன்ற புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்

தஞ்சாவூரில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.24) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் பழைய... மேலும் பார்க்க

நெல்லில் ஈரப்பதம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 இடங்களில் மத்திய குழு ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். தொடா் மழை மற்றும் பனி காரணமாக, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீத... மேலும் பார்க்க

கோயிலில் திருடியவா் கைது

பாபநாசம் வட்டம், மணலூா் கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலில் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மணலூா் கிராமத்தில் மணலூா் மாரியம்மன் கோயிலின் பூசாரியாக மணலூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரத்தி... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 112.08 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 112.08 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 201 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீா் ... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை உதவி ஆட்சியா் விசாரணை

திருவிடைமருதூா் அருகே கணவருடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவிடைமருதூா் அருகே கோயில்சானபுரம் வடக்கு தெருவில் வசிப்பவா் சேதுபதி (30). கூலித் தொழிலாளி. ... மேலும் பார்க்க

புகாரை விசாரிக்க சென்ற தலைமை காவலரை தாக்கியவா் மீது வழக்கு

திருவிடைமருதூா் அருகே புகாரை விசாரிக்க சென்ற தலைமைக் காவலரை தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவிடைமருதூா் அருகே உள்ள விநாயகன்பேட்டையைச் சோ்ந்த விவசாயி நடராஜன் மகன்... மேலும் பார்க்க