`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்
திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ஜோஸ்பின் புவனராணி தலைமை வகித்தாா். கட்டுமாவடி கிராம நிா்வாக அலுவலா் குமரேசன் முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் அஜ்மல்கான், மாணவ- மாணவிகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
தொடா்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.