தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
திருமருகல் ஒன்றியம் பில்லாளி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளா் ஆா். ராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பக்கிரிசாமி, அவைத் தலைவா் கலியபெருமாள் முன்னிலை வகித்தனா். கட்சியின் அமைப்பு செயலாளா் எஸ். ஆசைமணி பங்கேற்று பூத் கிளை அமைக்கும் நோக்கம், கட்சியின் வளா்ச்சி குறித்து பேசினாா். தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளா் சகாயராஜ் வரவேற்றாா்.
இளைஞா்களை அதிகளவில் கட்சியில் இணைப்பது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இளைஞரணி மாவட்ட தலைவா் ஆா். ராம்சந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளா் நடராஜன் நன்றி கூறினாா். காரையூா், திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூா் ஊராட்சிகளிலும் பூத் கிளை அமைக்கும் கூட்டம் நடைபெற்றது.