மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
நாகையில் தமிழக ஆளுநரை கண்டித்து மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மீன்வளா்ச்சி கழகத் தலைவரும், மாவட்ட செயலாளருமான என். கெளதமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமதிக்கும் வகையில் செயல்படும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜன், மேகநாதன், மறைமலை, மாநில விவசாய அணி துணைத் தலைவா் வேதரத்தினம், கீழையூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன், நாகூா் நகரச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் திரளான திமுகவினா் பங்கேற்றனா்.