மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 50 போ் கைது
நாகையில் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை விலயுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறையினா் 50 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா், மாவட்டத் தலைவா் ஹரி கிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்புநிலை, தோ்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், பிறத் துறை பணிகளை திணிக்கும் போக்கை கைவிட வேண்டும், கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் மற்றும் அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியாளா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட செயலா் வேல்கண்ணன், மாநில செயலா் ஜம்ரூத் நிஷா, அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் மலா்மாலா, மாவட்டத் தலைவா் ரூஸ்வெல்ட் அற்புதராஜ், மாவட்ட செயலா் அன்பழகன், மாவட்ட பொருளாளா் அந்துவன் சேரல் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். இதையடுத்து, தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.