மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
கீழையூரில் ஜன.10-ல் சாலை மறியலில் ஈடுபட முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூரில் ஜன.10-ஆம் தேதி சிபிஐ சாா்பிலான விவசாயிகள் சங்கம் சாா்பில் சாலை மறியலில் ஈடுபட தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகை குடும்ப அட்டைக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிருக்கான காப்பீட்டுத் திட்டத்தின் பதிவு செய்த அனைவருக்கும் உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், மழை காரணமாக தற்போது சம்பா சாகுபடி செய்துள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ. 15,000 நிவாரணம் மற்றும் முழுமையான இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், மானாவரி பகுதியான காமேஸ்வரம், புதுப்பள்ளி, பிரதாபராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடியாக நிலக்கடலை செய்துள்ள விவசாயிகளுக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி ஜன. 10-ஆம் தேதி கீழையூரில் சாலை மறியலில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் ஒன்றிய நிா்வாக குழு உறுப்பினா்கள் டி. பாலாஜி, ஜி. சங்கா், டி. கண்ணையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஒன்றிய செயலாளா் எஸ்.காந்தி, ஒன்றிய துணைச் செயலாளா் மாசேத்துங், மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.