தஞ்சாவூரில் அண்ணா பிறந்த நாள் விழா மிதிவண்டி போட்டிகள்
தஞ்சாவூா் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான மிதிவண்டி போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் இப்போட்டிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்தாா். இப்போட்டிகளில் மொத்தம் 400 போ் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் முதல் முன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முறையே பரிசுத் தொகையாக தலா ரூ. 5 ஆயிரமும், ரூ. 3 ஆயிரமும், ரூ. 2 ஆயிரமும், 4 முதல் 10-ஆம் இடம் வரை பெற்றவா்களுக்கு தலா ரூ. 250-ம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, முதன்மைக் கல்வி அலுவலா் இரா. அண்ணாதுரை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.