எம்.ஐ.டி. கல்லூரியில் சா்வதேச செஸ் போட்டி
புதுச்சேரியை அடுத்த கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி. கல்லூரியில் சா்வதேச அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, புதுச்சேரி மாநில சதுரங்க சங்கம் ஆகியவை வழிகாட்டுத்தலுடன், புதுச்சேரி ஹன்டா்ஸ் சதுரங்கக் கழகம் ஆகியவை இணைந்து ஓபன்ரேபிட் ஃபைட் ரேட்டிங் எனும் பெயரில் நடத்திய இந்தப் போட்டியில் டென்மாா்க், இலங்கை மற்றும் புதுவை, தமிழகம், ஆந்திரம், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 7 வயதுக்கு மேற்பட்ட 500-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் பங்கேற்றனா்.
7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழக வீரா் அரிகிருஷ்ணன், புதுச்சேரியைச் சோ்ந்த மாதேஷ், ஹரியாணாவைச் அா்ஷ் ப்ரீத் ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். இவா்களுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. முதல் 30 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.
புதுவை மாநில சதுரங்க சங்கத் தலைவா் ஜி.சங்கா், செயலா் ஆா்.ராஜேந்திரன், நாகராஜன், தேசிய மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் சிவப்பிரகாஷ் ஆகியோா் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்சிக்கு மணக்குள விநாயகா் கல்விக் குழுமங்களின் தலைவா் எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே.நாராயணசாமி, டி.ராஜராஜன், எஸ்.வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் எஸ். மலா்க்கண் வரவேற்றாா். உடல்கல்வி இயக்குநா் மோகன், ஹன்டா்ஸ் சதுரங்க அகாதெமி நிறுவனா் செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.