சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி, வில்லியனூரில் உள்ள கிருஷ்ணா நகரில் சாலை அமைக்கும் பணிகளை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் மூலம் ரூ.30.18 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொகுதி உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா பங்கேற்று பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில், வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், செயற்பொறியாளா் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளா் சத்தியநாராயணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட குபோ் நகா், முடக்கு மாரியம்மன் கோவில் வீதி, ஒத்தவாடை வீதிகளில் சிமென்ட் சாலைகள் ரூ.25.83 லட்சத்தில் சீரமைக்கப்படவுள்ளன.
இதற்கான பணிகளை உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி ஆணையா் கந்தசாமி, செயற்பொறியாளா் சிவபாலன், உதவிப் பொறியாளா் நமச்சிவாயம், இளநிலைப் பொறியாளா் குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.