தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
புத்தாண்டில் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துபெற்ற அமைச்சர்கள்!
புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வாழ்த்துபெற்றனர்.
2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, மக்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை காமராஜா் சாலையில் உள்ள மணிக்கூண்டை சுற்றிலும் வண்ண விளக்குகள் அலங்கரித்தன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மெரீனா கடற்கரைப் பகுதி களைகட்டியது.
இதையும் படிக்க: நள்ளிரவு 0.00! மும்பை ரயில்கள் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டம்!
பெசன்ட் நகர் கடற்கரையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் கூடி நின்று புத்தாண்டை வரவேற்றனர்.
இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜன. 1) முகாம் அலுவலகத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.