செய்திகள் :

குமரி, நெல்லைக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

post image

குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று(ஜன. 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதையும் படிக்க:

இதன் காரணமாக இன்று (ஜன. 1), தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.

02-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாள்கள் தங்கத்தின் விலை ஏற்றமடைந்த நிலை... மேலும் பார்க்க

பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல்-சிவ... மேலும் பார்க்க

சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இன்று(ஜன. 4) காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இத... மேலும் பார்க்க

தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.14 கன அடியாக சற்று குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.76 அடியில் இருந்து 119.14 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினா... மேலும் பார்க்க

நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை(ஜன.4) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத... மேலும் பார்க்க