பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது
உலக பிளிட்ஸ் செஸ்: முதல்முறையாக இருவர் சாம்பியன்!
அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்கள்.
போட்டியின் முக்கிய கட்டமான நாக்-அவுட் சுற்றில் வென்ற ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, நார்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
இறுதிச் சுற்றில் இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.
வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன்ஷிப்பை பகிர்ந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கார்ல்சென் 7 முறை பிளிட்ஜ் செஸ் கோப்பையை வென்றிருந்த நிலையில் தற்போது 8ஆவது முறையாக வென்றிருக்கிறார்.
ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி முதல் முறையாக பிளிட்ஸ் செஸ் கோப்பையை வென்றுள்ளார்.
மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 3.5 புள்ளிகளில் வென்றார்.