மருத்துவமனைக்குச் சென்ற பும்ரா..! அணியை வழிநடத்தும் விராட் கோலி!
பாங்காக்கில் கூலி படப்பிடிப்பு?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் ஜெய்ப்பூரில் அமீர் கானுடன் இணைந்து ரஜினி நடித்தார்.
இதையும் படிக்க: மார்ச் வெளியீடாக பிசாசு - 2!
பான் இந்திய வணிகத்திற்காக படத்தில் பல மாநில நடிகர்களும் இணைந்து நடித்து வருவதால் கூலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் 45 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.