'இனிமேலாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்' - ஆர்ஜேடி எம்.பி.
இனியாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் கூறியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி - மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. அதுமுதல் மணிப்பூரில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்கு பதட்ட சூழ்நிலை இருந்து வருகிறது.
பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்குச் செல்லவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான மனோஜ் குமார்,
இதையும் படிக்க | மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைகளுக்கு முதல்வர் பிரேன் சிங் முன்பே மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட 19- 20 மாதங்களுக்குப் பிறகு, நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள். அது எப்படி உதவும்?
பிரதமர் மோடி ஒரு முறையாவது மணிப்பூருக்குச் செல்ல வேண்டும். இனிமேலாவது செல்ல வேண்டும். பிரதமரின் பயணம் மணிப்பூர் குணமடைய உதவும். அங்கு இயல்புநிலை, அமைதியை மீட்டெடுப்பது இன்று அவசரத் தேவை.
மணிப்பூர் விவகாரத்தில் மாநில அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்துள்ளன' என்றார்.
மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இன்று (ஜன.1) அதிகாலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.