செய்திகள் :

மும்பையில் கைதான 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை!

post image

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் போதைப் பொருள் வழக்கில் கைதான 8 பாகிஸ்தானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு குஜாரத் - மகாராஷ்டிரா கடல்பகுதியில் பாகிஸ்தானியர்கள் பயணித்த படகு ஒன்று இந்திய கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதில் மேற்கொண்ட சோதனையின்போது அந்த படகிலிருந்து 232 கிலோ அளவிலான சுமார் ரூ.6.96 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த போதைப் பொருளுடன் தொடர்புடைய 8 பாகிஸ்தானியர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் வைத்திருந்த 3 சாட்டிலைட் போன்களும், ஜி.பி.எஸ் வரைப்படமும் மற்றும் சில மின்னனு சாதனங்களும் கைப்பற்றப்பட்டது.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில் அது ஹெராயின்தான் என்று உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: உலகப் போர் தாக்குதலில் உயிர் தப்பிய மருத்துவர்: 103 வயதில் மரணம்!

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர்கள் 8 பேரும் தெற்கு மும்பையின் யெல்லோ கேட் காவல்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நீதிபதி சசிகாந்த் பங்கர் தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் 8 பாகிஸ்தானியர்களுக்கும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் குறைந்தப்பட்ச தண்டனை வேண்டிய நிலையில், போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என அவர்கள் 8 பேருக்கும் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

3 நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தொடங்கி முதல் மூன்று நாள்கள் தங்கத்தின் விலை ஏற்றமடைந்த நிலை... மேலும் பார்க்க

பள்ளி கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விக்கிரவாண்டியைச் சோ்ந்த பழனிவேல்-சிவ... மேலும் பார்க்க

சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இன்று(ஜன. 4) காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இத... மேலும் பார்க்க

தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் மாநிலத்தின் முதல் ஜல்லிக்கட்டு... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.14 கன அடியாக சற்று குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.76 அடியில் இருந்து 119.14 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினா... மேலும் பார்க்க

நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை(ஜன.4) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாத... மேலும் பார்க்க