ஐசிசி தரவரிசையில் சாதனை படைத்த பும்ரா..!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா அதிக புள்ளிகள் (907) பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் ரவி அஸ்வின் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தார். தற்போது, பும்ரா அதை பின்னுக்குதள்ளி சாதனை படைத்துள்ளார்.
மெல்போர்னில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்தாலும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தற்போதைய டாப் 5 பந்துவீச்சாளர்கள்
1.பும்ரா - 907
2. ஹேசில்வுட் - 843
3. கம்மின்ஸ் - 837
4. ரபாடா - 832
5. ஜான்சென் - 803
இதன்மூலம் உலக அளவில் இதுவரை ஒரு பந்துவீச்சாளர் பெற்ற அதிகபட்ச டெஸ்ட் தரவரிசையில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் சுழல்பந்து வீச்சாளர் டேரக் அண்டர்வுட் உடன் சமன்செய்துள்ளார்.
ஆல்-டைம் பந்துவீச்சில் டாப் 4
சிட்னி பார்னெஸ் - 932
ஜியார்ஜ் லோஹ்மன் - 931
இம்ரான் கான் - 922
முத்தையா முரளிதரன் - 920