செய்திகள் :

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை ஏன் இல்லை...? - நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன விளக்கம்!

post image

குமரியில் கண்ணாடி பாலம் திறப்பு!

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் அழகு மீனா ஆகியோர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கருத்தரங்கு நடைபெற உள்ள மேடையை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாளை மாலை முதல்வர் திருவள்ளுவர் சிலை - சுவாமி விவேகானந்தர் நினைவு பாறைக்கு இடையேயான கண்ணாடி பாலத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் விழா அரங்கில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். நாளை மறுநாள் காலை முதல்வர் உரையாற்றுகிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி மூன்று நாள் நிகழ்ச்சி இரண்டு நாளாக குறைக்கப்படுகிறது. 31-ம் தேதி மாலையில் நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அதற்கு பதிலாக ஜனவரி 1-ம் தேதி காலையில் நடக்க இருந்த கருத்தரங்கம் 31-ம் தேதி மாலை நடைபெறும்.

திருவள்ளுவர் வெள்ளிவிழா மேடையை பார்வையிடும் அமைச்சர் தங்கம் தென்னரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து பேசினார்

பொங்கல் பண்டிகைக்கு முதல்வர் ஆணைப்படி பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏறத்தாழ 749.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 2 மிகப்பெரிய இயற்கை இடர்பாடுகளை நாம் சந்தித்திருக்கிறோம். ஒன்று மிக்சாம் புயல். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி  மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் மூலம் நமக்கு என்ன நெருக்கடிகள் உருவாகி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மிக்சாம் புயல் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள சேதங்களில் மதிப்பீடாக 19,692 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம் பாதிக்கப்பட்டுள்ள 24. 25 லட்சம் குடும்பத்தினருக்கு தல 6000 ரூபாய் வீதம் வழங்கி இருக்கிறோம். அதற்கு மட்டும் 1,487 கோடி ரூபாய் அரசு செலவளித்து இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து நாம் கேட்டிருந்த உதவி ஏறத்தாழ 19,692 கோடி ரூபாய் தென் மாவட்டங்களில் கடும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு 18,214 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாம் ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். முழுமையாக பாதிக்கப்பட்ட 6.63 லட்சம் குடும்பத்தினருக்கு அன்று 6000 ரூபாய் வீதம் நிவாரணம் வழஙகியிருக்கிறோம். பகுதியாக பாதிக்கப்பட்ட 14.30 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபாய் வீதம் வழங்கியுள்ளோம். அதற்காக நாம் 541 கோடி ரூபாய் நாம் கொடுத்திருக்கிறோம். ஆக மொத்தம் 2028 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதி பொறுப்பிலிருந்து செலவிட்டு இருக்கிறோம்.

கேட்டது அதிகம்; கொடுத்தது குறைவு..

மத்திய அரசிடம் 37,906 கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். சமீபத்தில் இந்த ஆண்டு இறுதியில் பெஞ்சல் புயல் தாக்கியிருக்கிறது. அதற்கு சுமார் 7.2 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வீதம் வழங்கியதன் மூலம் 144 கோடி ரூபாய் செலவளித்திருக்கிறோம். நாம் மத்திய அரசிடம் கேட்டிருப்பது 37,906 கோடி ரூபாய். ஆனால் நமக்கு மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்து வெறும் 276 கோடிரூபாய்தான் வழங்கியுள்ளார்கள். இதுபோக பெஞ்சல் புயலுக்கு 6,725 கோடி கேட்டுள்ளோம். நாம் கேட்டிருப்பது மிக அதிகம், கிடைத்திருப்பது மிகக்குறைவு. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நிதிச் சுமையை நம்முடைய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நிதிச்சுமைக்கு நடுவில் தான் தொடர்ந்து வழங்கக்கூடிய ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாயை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அது நமக்கு மிகப்பெரிய நிதிச்சுமை இருந்தாலும் கவனமாக கையாண்டு அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

விழா மேடையை பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு

பொங்கல் பரிசுத் தொகை ஏன் இல்லை..?

பொங்கல் பரிசுத் தொகையை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு வழங்குவதில் நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டால்கூட, முதல்வர் பொங்கல் தொகுப்பு பொருள்களுக்காக நிதி வழங்கியுள்ளார். வரக்கூடிய காலங்களில் நிதி நிலைமையை சீராக்கும் நடவடிக்கை வரும். வரக்கூடிய காலங்களில் நல்ல சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன். மகளிர் உரிமைத்தொகை  பெற்றுவரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரும். இந்த முறைமுறை முன்கூட்டியே பயன்பெறும் தாய்மார்களுக்கு வழஙகலாம் என்ற கருத்துரு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. முதல்வரின் ஆணையையும் அறிவுரையும் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளுவர் வெள்ளிவிழா இது மாநில விழா. நான் பொறுப்பு அமைச்சர், ஆனாலும் அப்படி இந்த விழாவுக்கு வரவில்லை. கருத்தரங்கின் தலைவர் என்ற முறையில்தான் என் பெயர் போடப்பட்டுள்ளது. மாநில விழா என்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பெயர்களும்கூட இதில் இடம்பெறவில்லை. வேண்டும் என்றே யாரையும் புறக்கணிக்கப்படவில்லை" என்றார்.

Doctor Vikatan: காதுக்குள் அழுக்கு... சொட்டு மருந்து போட்டால்தான் சுத்தமாகுமா?

Doctor Vikatan: சமீபத்தில், என்னுடைய இடதுகாதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே,காது, மூக்கு, தொண... மேலும் பார்க்க

Health: விருந்துக்குப் போறீங்களா? இத ஃபாலோ பண்ணலாமே...

''விருந்தும் விருந்தோம்பலும் தமிழர் மரபில் கலந்தவை. பண்டிகை, திருவிழா, திருமண விழாக்களில் மட்டுமே விருந்து என்ற நிலை இன்று மாறிவிட்டது. பஃபே எனச் சொல்லப்படும் மாடர்ன் விருந்து பிரபலமாகிவிட்டது. காலை, ... மேலும் பார்க்க

``தமிழின் அதிகாரமும், தமிழர்களின் அதிகாரமும்..'' - திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் வைரமுத்து!

`சிலை பேசாது, குறள் பேசும்' - அமைச்சர் தங்கம் தென்னரசுகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர... மேலும் பார்க்க

``கொண்டாடி கொண்டே இருப்போம்" - திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!

திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாகன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே... மேலும் பார்க்க

Adyar park: பயன்படுத்த முடியாத நிலையில் பெருநகர பூங்கா... நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி?

சென்னையின் இதயப் பகுதியான அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா. இப்பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங... மேலும் பார்க்க

கடல் நண்டுச்சாறு முதல் அமிர்தப்பொடி வரை...சளி, இருமல் போக்கும் ரெசிபிக்கள்!

கடல் நண்டுச்சாறு நண்டுச்சாறுதேவையானவை:நண்டு - 10, நண்டின் சதைப்பகுதி (தனியாக) - 100 கிராம், பெரிய வெங்காயம் - 250 கிராம், பிரிஞ்சி இலை - 5 கிராம், மிளகு - 10 கிராம், ஏலக்காய் - 5 கிராம், கிராம்பு - 5 ... மேலும் பார்க்க