செய்திகள் :

வைஷ்ணவி தேவி கோயிலில் 94.8 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

post image

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புனிதமான இந்து சமயக் கோயில்களில் வைஷ்ணவி தேவி கோயிலும் ஒன்றாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனிதத் தலமானது ஐம்மு பகுதியில் கத்ரா என்ற ஊருக்கு அருகில் 5,200 அடி உயரத்தில் இமயமலையின் ஒரு பகுதியான திரிகூடமலையின் உச்சியில் வைஷ்ணவி தேவி கோயில் உள்ளது. 30 மீ.நீளமும், 1.5 உயரமும் கொண்ட குகையில் முப்பெரும் தேவியரும் அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (தனுசு)

இதுதொடர்பாக தலைமைச் செயல் அதிகாரி கூறுகையில்,

2024-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 94.93 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த பத்து வருடத்தில் இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும். முன்னதாக டிசம்பர் 12 வரை 90 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாகக் கோயில் நிர்வாக தெரிவித்தது.

பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம், அதனால் அவர்களுக்கு இன்னும் சிறந்த அனுபவம் கிடைக்கும். எனவே, நாங்கள் தொடர்ந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறோம். கத்ராவுக்கான இணைப்பு அதிகரித்து வருகின்றது. வந்தே பாரத் ரயில் அல்லது தில்லி-கத்ரா எக்ஸ்பிரஸ் விரைவில் முடிவடையும், கத்ராவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், எனவே, உள்கட்டமைப்பு முயற்சிகளை வாரியம் மேற்கொண்டு வருகிறது.

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இது இந்தியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட மதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!

வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விமான சேவையும் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி விமான நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில், 100 அடிக்கு ... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதி விபத்து; குழந்தை உள்பட 5 பேர் பலி!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ராஜஸ்தானில் உதய்ப்பூரில் கோகுண்டா - பிந்த்வாரா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழ... மேலும் பார்க்க

போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு: நகா் முழுவதும் போராட்டம் - பதற்றம்

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து பீதம்பூருக்கு எடுத்துவரப்பட்ட நச்சுக் கழிவுகள், அங்கு பாதுகாப்பான முறையில் எரிக்கப்படவுள்ளன. அதேநேரம், தங்களது பகுதியில் க... மேலும் பார்க்க

ஒடிஸா, மணிப்பூா் ஆளுநா்கள் பதவியேற்பு

ஒடிஸா மற்றும் மணிப்பூரின் புதிய ஆளுநா்களாக ஹரி பாபு கம்பம்பட்டி மற்றும் அஜய் குமாா் பல்லா முறையே வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். மணிப்பூரின் 19-ஆவது ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்ல... மேலும் பார்க்க

தரமற்ற மருந்துகள் உற்பத்தி: 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அனுமதி

தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது வழக்கு தொடர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மருந்துகளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் ‘டிராய்’ மூத்த அதிகாரி கைது

ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) மூத்த அதிகாரி ஒருவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். ஹிமாசல பிரதேச மாநிலம், சிா... மேலும் பார்க்க