செய்திகள் :

Doctor Vikatan: காதுக்குள் அழுக்கு... சொட்டு மருந்து போட்டால்தான் சுத்தமாகுமா?

post image

Doctor Vikatan: சமீபத்தில், என்னுடைய இடது காதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்தித்தேன். இரண்டு காதிலும் லைட்டெல்லாம் அடித்துப்பார்த்தவர், 'அழுக்கு நிறைந்திருக்கிறது. இந்த மருந்தை தினமும் எட்டு சொட்டு வீதம், ஆறு வேளை, ஆறு நாள்களுக்குப் போடுங்கள். அதன் பிறகு, என்னை வந்து பாருங்கள். காதை சுத்தம் செய்துவிடலாம்' என்றார். எனக்கு, நம்பிக்கையே வரவில்லை. பொதுவாக காதை சுத்தமெல்லாம் செய்யக்கூடாது என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அந்த மருந்தை போட்டுக் கொள்ளலாமா... வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். என்ன ஆச்சர்ய்ம் மறுநாளிலிருந்து அந்தப் பிரச்னை இல்லை. இந்த விஷயத்தில் மருத்துவர் சொன்னது சரியா... காது அழுக்குக்கு இவ்வளவு தூரம் மருந்தெல்லாம் போட வேண்டுமா... அதேபோல, நான் செய்தது சரியா...?  

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

இ.என்.டி மருத்துவர் உங்கள் காதுகளைப் பரிசோதித்துவிட்டு, அதற்கேற்பதான் காதுகளுக்கான சொட்டு மருந்தைப் பரிந்துரைத்திருப்பார். மருத்துவரே காதுகளைச் சுத்தப்படுத்தும் மருந்தைப் பரிந்துரைத்துவிட்டாரே என  நாமாகவே அடுத்தடுத்த முறை அதை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது.

காதுக்குள் உள்ள அழுக்கை நாம் சுத்தப்படுத்த வேண்டும் என அவசியமில்லை. காதுகள் தம்மைத்தாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை. இத்தகைய  சொட்டு மருந்து, காதுகளைச் சுத்தப்படுத்திவிடாது. காதுகளுக்குள் உள்ள அழுக்கை மென்மையாக்கும். அதனால் அந்த அழுக்கு சுலபமாக வெளியே வரும். சிலருக்கு இந்த அழுக்கானது தானாக வெளியே வராது. அந்த நிலையில் மருத்துவரை அணுகினால் வாக்ஸ் த்ரோப் எனப்படும் பிரத்யேக கருவியைக் கொண்டோ, சக்ஷன் முறையிலோ அழுக்கை அகற்றிவிடுவார்கள். அரிதாக சில சமயங்களில் சிலருக்கு மயக்க மருந்து கொடுத்துகூட இந்த அழுக்கை அகற்ற வேண்டியிருக்கும்.

காதுகளில் அழுக்கு சேர்ந்து வெளியேற முடியாத நிலையில், அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான அறிகுறியை ஏற்படுத்தலாம்.

எல்லோரும் மருத்துவர்களிடம் சென்று காதுகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. லட்சத்தில் ஒருவர் என்ற கணக்கில் மட்டுமே இது தேவைப்படும். காதுகளில் அழுக்கு சேர்ந்து வெளியேற முடியாத நிலையில், அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான அறிகுறியை  ஏற்படுத்தலாம். உங்களுக்கு பூச்சி பறப்பது போன்ற உணர்வைத் தந்தது போல, இன்னொருவருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம், வேறு ஒருவருக்கு வலி, காதுகளை அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு என இது வேறுபடலாம்.

காதுகளின் அழுக்கு தாமாக வெளியேறுவதில் சிக்கல் உள்ளவர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் இ.என்.டி மருத்துவரை அணுகி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். சிலருக்கு ஒருசில நாள்களில் தானாகவே சரியாகிவிடும் என்பதால் நீங்கள் செய்ததும் சரிதான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

ஹிட்லிஸ்டில் Duraimurugan, டெல்லி விசிட், திகிலில் Annamalai? | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் அதிரடி ரெய்டை நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. இது டெல்லியின் ஸ்கெட்ச் என்கிறார்கள். அடுத்தடுத்து ஆறு அமைச்சர... மேலும் பார்க்க

முன்வரிசையில் அமர சண்டை; திமுக பெண் நிர்வாகிகளிடையே கைகலப்பா? நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 02-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து... மேலும் பார்க்க

ED RAID - ஆளுநர் டெல்லி விசிட்; துரைமுருகன் மகனுக்கு செக்? | Anna University | DMK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ED RAID... காரணம் என்ன? * வேலூர்: 'வீட்டுக்கு வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை' - அமலாக்கத்துறை சோதனை குறித்து துரைமுருகன் * தமிழகத்தில... மேலும் பார்க்க

காட்பாடி: துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு... வெளியே டீ, சமோசா, சிக்கன் பிரியாணி.. மெனு விவரம்!

வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதே வீட்டில் அவரின் மகனும் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் வசித்... மேலும் பார்க்க