266ஆவது பிறந்த தினம்: கட்டபொம்மன் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம், சிங்கிலிபட்டி கல்குமி, வைப்பாறு ஆகிய இடங்களில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மன் உருவப்படத்துக்கும், சிங்கிலிபட்டி கல்குமி, வைப்பாறு கிராமங்களில் அவரது சிலைக்கும் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ. வி. மாா்க்கண்டேயன் மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜன், ஊராட்சித் தலைவா்கள் சீதாராமன், செல்வகுமாா், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளா் ஆவுடையப்பன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தேமுதிக: விளாத்திகுளத்தில் தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளா் சுரேஷ் தலைமையில் கட்டபொம்மன் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலா்கள் தங்கச்சாமி மாரியப்பன், பெருமாள்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.