ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின...
கோவில்பட்டி கல்லூரி நிறுவனருக்கு விருது
கோவில்பட்டி ஜெயா கேட்டரிங் கல்லூரி நிறுவனரும் தொழிலதிபருமான சீனிராஜுக்கு விருது வழங்கப்பட்டது.
இவா், கோவில்பட்டியில் ‘வானமே எல்லை’ என்ற தலைப்பில் மாணவா்-மாணவியருக்கு தன்முனைப்புப் பயிற்சி முகாமை அண்மையில் நடத்தினாா். இதைப் பாராட்டி அவருக்கு, ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சாா்பில் நிறுவனா் சீனிவாசன் விருது வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், அறக்கட்டளைத் தலைவா் ஜெயக்கொடி, செயலா் ஜோதி காமாட்சி, பொருளாளா் காா்த்திகேயன், செயற்குழு உறுப்பினா்கள் நடராஜன், சண்முகவேல், லவராஜா, பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.