ஓய்வுக்குப் பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம்: முன...
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்துக்கு பூமிபூஜை
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரூ.5 கோடியே 90 லட்சத்தில் கட்டப்படவுள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கான பூமிபூஜையை வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்வில் ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் இந்துமதி, கொட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.