ஓய்வுக்குப் பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம்: முன...
நகருக்குள் பசுமை எரிவாயு நிரப்பும் மையம் அமைக்க வலியுறுத்தல்
மதுரையில் பசுமை எரிவாயு நிரப்பும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ ஆட்டோ தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது.
சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. தெய்வராஜ், பொதுச் செயலா் என்.கனகவேல் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை மூலம் சுமாா் 14,000 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. தற்போது பேட்டரி ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் பசுமை எரிவாயு மூலம் பெரும்பாலான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை மேலமடை, உத்தங்குடி, அவனியாபுரம், தனக்கன்குளம், மேலுாா், வெள்ளரிப்பட்டி போன்ற இடங்களில் மட்டுமே பசுமை எரிவாயு நிரப்பும் மையம் செயல்படுகின்றன. மேலமடை சந்திப்பில் மேம்பால வேலை நடைபெறுவதால், இந்த மையத்தில் எரிவாயு நிரப்ப முடியாத நிலை உள்ளது.
மதுரை புகா்ப் பகுதிகளில் மட்டுமே பசுமை எரிவாயு நிரப்பும் மையங்கள் செயல்படுவதால், மதுரை நகருக்குள் ஓடும் ஆட்டோக்கள் எரிபொருள் நிரப்ப சுமாா் 15 கி.மீ.முதல் 20 கி. மீ. தொலைவுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், ஆட்டோ தொழிலாளா்களுக்கு பெரும் பொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது.
எனவே, மதுரை நகருக்குள் குறைபட்சம் மூன்று இடங்களிலாவது பசுமை எரிவாயு நிரப்பும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.