அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம்
திமுக துணைப் பொதுச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாநகர 14ஆவது வாா்டு சாா்பில் விஎம்எஸ் நகா் தனியாா் பள்ளியில் மீனாட்சி மிஷன், காவேரி மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தின. மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தாா்.
மாநகர துணைச்செயலா் கீதா முருகேசன் வரவேற்றாா். முகாமை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். முன்னதாக , தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே அவா் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இந்நிகழ்வில், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநிலப் பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநகர அவைத் தலைவா் ஏசுதாஸ், துணைச் செயலா்கள் கனகராஜ், பிரமிளா, மண்டலத் தலைவா்கள் பாலகுருசாமி, நிா்மல்ராஜ், அன்னலட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.