Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அ...
அப்பமசமுத்திரத்தில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை
அப்பமசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்ஷினி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் நிலையில் இந்தப் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நல்லம்மாள், பத்திரம் எஸ்.மனோகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் திரளாக கலந்துகொண்டனா்.