செய்திகள் :

சேலத்தில் நாளை குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

post image

சேலம்: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (டிச. 8) முதல் தொடங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி - 4 இல் அடங்கிய பணிகாலியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு வெளியிடப்பபடவுள்ளது. இத்தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, சேலம், ஏற்காடு சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பு ஏற்கெனவே போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக் குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

கடந்த ஆண்டு தோ்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு தோ்வுகளுக்கு இந்த அலுவலகத்தில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு 322 போ் அரசுப் பணியினைப் பெற்றுள்ளனா். தற்போது நடத்தப்படவுள்ள தொகுதி 4- இல் அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தோ்வா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும் இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 0427-2401750 என்ற எண்ணில் தொலைபேசி தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஹீமோபிலியா பாதித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை: சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனை படைத்தனா். இது குறித்து மருத்துவ கல்லூரி முதன்மையா் தேவி மீனாள் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் ... மேலும் பார்க்க

சேலம் அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும்!

சேலம் கிழக்கு கோட்ட துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து சேலத்தில் திமுக ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை கண்டித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் ... மேலும் பார்க்க

எடப்பாடி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்பு அறுவடை பணி தீவிரம்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் காவிரி பாசனப் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்பு அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எடப்பாடி பகுதியில் உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், ... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

நரசிங்கபுரம் நகராட்சி ஆணையராக ஜீவிதா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். நரசிங்கபுரம் நகராட்சிக்கு ஆணையா் நியமிக்கப்படாததால் ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் கூடுதலாக நரசிங்கபுரம் நகராட்சி ... மேலும் பார்க்க