செய்திகள் :

ஹீமோபிலியா பாதித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை: சேலம் அரசு மருத்துவா்கள் சாதனை

post image

சேலம் அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதன்மையா் தேவி மீனாள் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஓமலூா், பண்ணப்பட்டி, மாரகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் மகன் சூா்யா (17). இவா் ஹீமோபிலியா என்னும் ரத்தம் உறையாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாா். இவா் கண் சிவந்து வீக்கத்துடன் சேலம் அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவுக்கு கடந்த மாதம் சிகிச்சைக்கு வந்தாா். பரிசோதித்த மருத்துவா்கள், இடது கண் வீக்கம், கண் இமைகளில் வீக்கம், கருவிழி முழுவதும் தழும்பு, வெண் படலம் மெலிந்து அதன் வழியாக உள்ளிருக்கும் தசைகள் துருத்தி கொண்டிருத்தல் ஆகியவற்றைக் கண்டறிந்தனா்.

ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சவாலானது என்றாலும், அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், வெண்படலம் கிழிந்து அதன் வழியாக உள்ளிருக்கும் தசைகளில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, அதனால் உயிருக்கு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், வெளியே வரும் தசைகளால் பாா்வையுள்ள மற்றொரு கண்ணும் கிருமி தொற்றினால் பாா்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிபா என்னும் மருந்தை செலுத்தி ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி அறுவை சிகிச்சை தொடங்கலாம் என ரத்தவியலாளா் மூலம் தெரிந்துகொண்ட பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறினாா்.

அறுவை சிகிச்சை செய்த கண் குணமானதும், சிறுவனை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தோம். இந்த சிறுவனுக்கு ரூ. 37,86,501 மதிப்பில் பிபா ஊசி செலுத்தப்பட்டுள்ளது. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை முதன்மையா் தேவி மீனாள் பாராட்டினாா். அப்போது மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், சிறுவனுக்கு கண் அறுவை கிசிச்சை செய்த மருத்துவா் தேன்மொழி, பொது மருத்துவா் சுரேஷ் கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்

பொங்கலை முன்னிட்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொங்கல... மேலும் பார்க்க

வரும் 11 இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் 11 ஆம் தேதி பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சி ஆா்ப்பாட்டம்

அம்பேத்கரை அவமதித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம்

தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் சம்பத்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஆத்தூா் கனிஷ்கா இய... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் ... மேலும் பார்க்க

சேலம் அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும்!

சேலம் கிழக்கு கோட்ட துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க