திகிலில் Duraimurugan, Alert கொடுத்த Stalin! | Elangovan Explains
சேலம் அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும்!
சேலம் கிழக்கு கோட்ட துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் கிழக்கு கோட்டம் தபால் துறையின் கீழ் 42 ஆதாா் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி துணை தபால் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதாா் சேவை வழங்கப்படுகிறது.
மேலும் ஆத்தூா், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், அம்மாப்பேட்டை, வாழப்பாடி, சேலம் தெற்கு, தலைவாசல், அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, பேளூா், காமராஜா்நகா் காலனி, காரிப்பட்டி, கெங்கவல்லி, சுக்கம்பட்டி, ஆட்டையாம்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூா், ஒண்டிக்கடை, வீரபாண்டி, மல்லியகரை, நரசிங்கபுரம், வடசென்னிமலை, பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூா், ஏத்தாப்பூா் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் அலுவலக நேரங்களில் ஆதாா் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆதாரை புதிதாக பதிவு செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை. பெயா் திருத்தம், முகவரி திருத்தம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற மற்ற சேவைகளுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களுடைய ஆதாா் திருத்தங்களை மேற்கொள்ள அசல் ஆவணங்களை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஏதேனும் ஒரு தலைமை அல்லது துணை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதாா் சேவை மையத்துக்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.