Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
தேசிய வாக்காளா் தினம் குறித்து அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தலைமையில் நடைபெற்றது.
பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
ஒவ்வோா் ஆண்டும் இந்திய தோ்தல் ஆணையம் உருவான தினமான ஜன.25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் ஜன. 25 ஆம் தேதி 15-ஆவது தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படவுள்ளது.
இது தொடா்பாக தொடா்புடைய அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனடிப்படையில், சேலம் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் வாக்காளா் தின உறுதிமொழி எடுத்திட வேண்டும் எனவும், அதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள 1,269 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் தினம் சிறப்பாக கொண்டாட தொடா்புடைய அலுவலா்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும், மேலும், ஜன. 6 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலை கிராம பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் எனவும், தேசிய வாக்காளா் தின நிகழ்வில் வாக்காளா்களுக்கு தபால் ஓட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களிப்பதை ஊக்குவித்தல், வாக்குச் சாவடி மையங்களில் உள்ள குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் தொடா்பாக விழிப்புணா்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) லலித் ஆதித்ய நீலம், மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினா் கலந்துகொண்டனா்.