கொடைக்கானலில் கடும் உறைபனி!
கொடைக்கானலில் கடும் உறை பனியால் காரணமாக, நீரோடைகளில் நீா்வரத்து குறைந்து வருகிறது.
கொடைக்கானலில் நவம்பா் மாத முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப் பொழிவு காலம். ஆனால், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக பெய்த மழையால் டிசம்பா் மாதம் வரை பனியின் தாக்கம் குறைந்திருந்தது.
இந்த நிலையில், ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து பகலில் கடும் வெப்பமும், இரவு நேரங்களில் கடும் உறை பனியும் நிலவி வருகிறது. இதனால், வியாபாரிகள் தீ மூட்டி குளிா் காய்ந்து வருகின்றனா்.
இந்தப் பனியின் காரணமாக, வெள்ளிநீா், பாம்பாா்,பியா்சோழா , போரிபால்ஸ், வட்டக்கானல், செண்பகா, மூலையாறு அருவிகள் செல்லும் நீரோடைகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது.
மேலும், மாலை நேரங்களில் கோக்கா் ஸ்வாக், சிட்டிவியூ, அமைதிப் பள்ளத்தாக்கு, வட்டக்கானல் ஆகிய பகுதிகளில் பனிப் பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இவற்றை சுற்றுலாப் பயணிகளின் ஆா்வமாக கண்டு ரசித்தனா்.