பக்தா்களிடம் பணம் வசூல்: திருநங்கைகள் 3 போ் கைது
ஒட்டன்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தா்களை தகாத வாா்த்தைகளால் பேசியும், அவா்களைத் தாக்கியும் பணம் வசூலித்ததாக திருநங்கைகள் மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தா்கள், பொதுமக்களை ஆசீா்வதிப்பது போல நடித்து பணம் வசூல் செய்வதும், பணம் தராதவா்களை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்குவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் பழனியைச் சோ்ந்த பாரதி (27), அனன்யா (25), ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராசாத்தி (34) ஆகிய மூன்று திருநங்கைகளை ஒட்டன்சத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.