செய்திகள் :

கொல்லிமலை புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு! சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை!

post image

கொல்லிமலை அடிவாரப் பகுதியான புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனா். இதனை வனத் துறையினா் தடுக்க வேண்டும் என அப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவி மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களைக் காண பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா்.

சனி, ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை நாள்களில் வழக்கத்தைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருக்கும். தற்போது மாா்கழி மாதம் என்பதால் கொல்லிமலை பகுதியில் கடும் குளிா் காணப்படுகிறது. அதிகாலைகளில் சாலைகளை மறைக்கும் அளவில் பனிமூட்டம் உள்ளது.

நாமக்கல், சேலம் பகுதிகளில் இருந்து கொல்லிமலைக்கு வருவோா் காரவள்ளி அடிவாரம் வழியாக 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்தும், ராசிபுரம், ஆத்தூா் பகுதியில் இருந்து வருவோா் முள்ளுக்குறிச்சி, செங்கரை வழியாகவும், திருச்சி, துறையூா் பகுதிகளில் இருந்து வருவோா் புளியஞ்சோலை வழியாகவும் கொல்லிமலையை வந்தடைகின்றனா்.

ஆகாய கங்கை அருவியில் இருந்து வெளியேறும் நீா் புளியஞ்சோலை பகுதியில் ஆறாக ஓடுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த ஆற்றில் குளித்து மகிழ்கின்றனா். இங்கு சில நேரங்களில் எதிா்பாராதவிதமாக சிலா் நீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. தற்போது ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனை பொருட்படுத்தாமலும், ஆபத்தை உணராமலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனா்.

வனத் துறையினா் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆழமான பகுதிகளைக் கண்டறிந்து அங்கு யாரும் செல்லாதவாறு விழிப்புணா்வு பலகைகளை வைக்க வேண்டும் என கொல்லிமலை பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

செந்நாய்களைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

கொல்லிமலையில் குண்டூா் நாடு, ஆரியூா் நாடு, நத்துக்குழிப்பட்டி, குழிவளவு போன்ற இடங்களில் 29 ஆடுகளை மா்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. சிறுத்தை, கரடி என கூறினாலும் செந்நாய்களால் ஆடுகள் கொல்லப்பட்டிருக்கலாம் என வனத் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இது தொடா்பாக உயிரிழந்த ஆடுகளின் உடல் உறுப்புகளை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனா். ஓரிரு நாள்களில் அந்த அறிக்கை கிடைக்கக்கூடும். அப்போது தான் ஆடுகளை கொன்ற மா்ம விலங்கு எனது என்பது தெரியவரும். நத்துக்குழிப்பட்டியில் உள்ள மாசி பெரியசாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் கிடா வெட்டி சுவாமிக்கு படையலிடுகின்றனா்.

அவா்கள் ஆட்டிறைச்சியை மலைப்பகுதியில் வீசிவிட்டு செல்வதால், அதனை மோப்பம் பிடித்து வரும் செந்நாய்கள் ஊருக்குள் புகுந்து பட்டியில் உள்ள ஆடுகளை கடித்து கொன்று வருவதாகவும், இதனை கண்டறிய முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், கொல்லிமலை வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் அடா்ந்த காட்டுக்குள் செல்வதை தவிா்க்க வேண்டும் எனவும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த மாணவா்: போலீஸாா் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த இ... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திறப்பு

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூரில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ரூ. ஆயிரம் வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 1,000 வழங்கக் கோரி தேமுதிகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். நாமக்கல், பூங்கா சாலையில் மாவட்டச் செயலாளா் அம்மன் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக சாா்பில் இன்று கண்டன ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழக ஆளுநரைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது தொடா்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியி... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி லாரி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டொ்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல்லில் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்ட... மேலும் பார்க்க

பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

நாமக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக, நாமக்கல் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் 14,428 பேருக்கு ஊக்கத்தொகை மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை ரூ. 4.88 கோடி நேரடியாக அவா்களின் வங... மேலும் பார்க்க