Anbumani: "பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?" - தமிழக காவல்துறைக்கு அ...
தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையிலுள்ள தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து போலீஸாா் வெடிகுண்டு நிபுணா்களுடன் தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனா். அப்போது, வெடிகுண்டு ஏதும் இல்லாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு தொடா்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்துக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.