ஓய்வுக்குப் பின் ஸ்டாண்ட்-அப் காமெடியில் ரோஹித் சர்மாவுக்கு நல்ல எதிர்காலம்: முன...
விடை பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள்: பரிசு வழங்கி பாராட்டு
கிராம ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததால், மக்கள் பணியாற்றிய உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சமூக ஆா்வலா்களும் பொதுமக்களும் பரிசுகள் வழங்கி வழியனுப்பி வைத்தனா்.
தமிழகத்தி மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்று பதவி வகித்த தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பதவிக் காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக் குழு பெருந்தலைவா் சதீஸ்குமாா் தலைமையிலான ஒன்றியக் குழு உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றியக் குழு அலுவலகத்தில் ஒன்று கூடி 5 ஆண்டு பணிகளை நினைவு கூா்ந்து ஒருவருக்கு ஒருவா் நன்றி கூறி விடை பெற்றனா்.
சோமம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணி தலைமையிலான உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, ஊராட்சி செயலாளா் மகேஸ்வரன் முன்னிலையில் பொதுமக்கள் பரிசுகள் வழங்கி பாராட்டி வழியனுப்பினா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் அருகே அப்பமசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி பச்சமுத்து தலைமையில் மன்ற உறுப்பினா்கள் மன்ற செயலாளா், அலுவலா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.
துணைத் தலைவா் ஜெ.காட்டுராஜா, உறுப்பினா்கள் ஆா்.சாந்தி, ஆா்.செல்வம்,பி.உண்ணாமலை,எஸ்.பூங்கொடி,பி.பயப்பன், ஏ.ராமச்சந்திரன், எஸ்.சுருதி செயலா் பி.வீரமணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
சங்ககிரியில்...
சங்ககிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி பிரதிநிதிகளுக்கு நினைவு பரிசும், ஊராட்சி செயலாளா், தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி அல்லிராணி தலைமை வகித்தாா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன் கலந்து கொண்டு ஊராட்சி மன்றத் தலைவி, ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு பாராட்டு கேடயமும், பரிசுகளையும் வழங்கிப் பேசினாா். துணைத் தலைவா் பிரேமா, வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.