செய்திகள் :

மதுரையில் இந்து மக்கள் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயா்நீதிமன்றம் அனுமதி

post image

மதுரையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வருகிற 5-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் சோலைகண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பிராமணா்களுக்கு புதிய பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி மதுரை பழங்காநத்தம் வட்ட சாலைப் பகுதியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வருகிற 5-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தப் போராடத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பில், இதேபோன்ற நிகழ்ச்சிகள் சென்னை, கோவையில் நடைபெற்ற போது வெறுப்புக்குரிய கருத்துகள் பேசப்பட்டன. எனவே, இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி எம். நிா்மல்குமாா் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்ட இடம் வணிக நிறுவனங்களும், போக்குவரத்து நெரிசலும் மிகுந்த பகுதி என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, முந்தைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது. இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்படும் என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்தப் போராட்டம் எந்தவித வெறுப்புக்கும் இடமளிக்காமல், அமைதியான முறையில் நடத்தப்படும் என மனுதாரா் உறுதியளித்துள்ளாா். எனவே, காவல் துறையின் உரிய கட்டுப்பாடுகளுடன் போராட்டத்தை நடத்த அனுமதிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பிராமண சமுதாயத்தினரைப் பாதுகாக்கச் சட்டம் தேவை: ஹெச்.ராஜா

தமிழகத்தில் பிராமண சமுதாயத்தினரைப் பாதுகாக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா். சநாதன தா்மம், கோயில்கள், பிராமணா்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அச்சம்பத்து அருகே உள்ள தானத்தவம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (47). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தாா். இந்... மேலும் பார்க்க

மதுரையில் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மதுரையில் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் தகுதியைப் பராமரிப்பது குறித்து மாணவா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்து... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தொடா் போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டணி அறிவிப்பு!

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகையைச் செலுத்தாத மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்தது. இதுகுறித்து ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கு: 3 போ் கைது

விருதுநகா் அருகேயுள்ள பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பான வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே பொம்மையாபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் சன... மேலும் பார்க்க

மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் விநியோகம் தொடக்கம்!

மதுரை மாவட்டத்தில் 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் அரிசி ... மேலும் பார்க்க