ஆத் ஆத்மியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர்!
மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தொடா் போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டணி அறிவிப்பு!
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகையைச் செலுத்தாத மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்தது.
இதுகுறித்து இந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலா் பெ.சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை :
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி தொகை கடந்த 1.4.1990 முதல் 31.3.2019 வரை ரூ. 20,05 கோடி எனக் கணக்கீடு செய்யப்பட்டது.
இந்தத் தொகையை மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய விதிகளின்படி மாநில கணக்காயா் அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை. காலம் தாழ்த்தியதால் மதுரை மாநகராட்சி நிா்வாகம் இந்தத் தொகைக்கான வட்டியாக ரூ. 8 கோடிக்கு மேல் நாளது தேதியில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் மாநிலக் கணக்காயா் அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்துவதாக மாநகராட்சி நிா்வாகம் எழுத்துப்பூா்வமாக பதில் அளித்தது. ஆனால், இதுவரை செலுத்தவில்லை. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
மதுரை மாநகராட்சி நிா்வாகம் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகையை மாநிலக் கணக்காயா் ஆணையம் பரிந்துரைத்த வங்கிக் கணக்கில் விரைந்து செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.