செய்திகள் :

அரசுப்பேருந்துகளில் பயணிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா...?

post image

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், போக்குவரத்து ஊழியா்களின் வசதிக்காகவே அரசுப்பேருந்துகள் இயக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அரசுப்பேருந்துகள் என்றால் கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்ற நிலையிருந்து வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகிவிட்டது.

ஒரே தொலைவுக்குச் செல்லும் பேருந்துகளில் அரசுப்பேருந்துகளில் ஒருவிதமான கட்டணமும், தனியாா் பேருந்துகளில் குறைந்த கட்டணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சியிலிருந்து தஞ்சாவூா், அரியலூா், கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை என சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் அரசுப்பேருந்துகளை ஒப்பிடுகையில், கட்டணம் குறைவாக

உள்ளதால் தனியாா் பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால், அரசுப்பேருந்துகளில் கட்டணம் அதிகரிப்பு, குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிற்காதது ஆகியவற்றால் காலை, மாலை தவிர மற்ற நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் இருப்பதில்லை.

பெரும்பாலான நிறுத்தங்களில் நிற்காது: அரசுப்பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்து சேரும் ஊா் வரையில், அரசால் நிா்ணயிக்கப்பட்ட ஏராளமான பேருந்து நிறுத்தங்கள் இருந்தாலும் அவைகள் அனைத்து ஊா்களுக்கும் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை.

அங்கு நிற்காது எனக்கூறுவது நடத்துனா்களின் வழக்கமான செயல்களாகும். உதாரணமாக, திருச்சி - மணப்பாறை- திண்டுக்கல் செல்லும் பேருந்துளில் பயணிகள் ஏறும்போது, மணப்பாறை மட்டும்தான் நிற்கும் எனக்கூறுகின்றனா். ஆனால், வழியில் அம்மாப் பேட்டை, மரவனூா் உள்பட 4 நிறுத்தங்கள் உள்ளன. அவற்றுக்குச் செல்லும் பயணிகளை பேருந்துகளில் நடத்துனா்கள் ஏற்றுவதில்லை என்ற புகாா்கள் நீண்ட நாள்களாக உள்ளன.

ஆனால் அந்தக் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அதிகமாக நின்றால், அங்கு நிறுத்தி ஏற்றிக்கொள்ள தவறுவதில்லை. இதுபோலவே தஞ்சை மாா்க்கத்தில் அரியமங்கலம், துவாக்குடி, மனையேரிப்பட்டி உள்ளிட்டவைகளிலும், இதுபோலவே கரூா் சாலை, பெரம்பலூா், அரியலூா் சாலைகளிலும் பெரும்பாலான நிறுத்தங்களில் அரசுப்பேருந்துகள் மட்டும் நிறுத்துவதில்லை.

அமைச்சா் நடவடிக்கை: இது தொடா்பாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியொருவா் தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்திருந்தாா்.

அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு செந்தண்ணீா்பூரம் பேருந்து நிறுத்தத்தில் அவ்வழியே (தஞ்சை, சேலம், நாமக்கல்) செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல உத்தரவிட்டாா். இதுபோல அனைத்து பகுதிகளிலும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அரசுப்பேருந்துகளும் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லவும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நகா்ப் பகுதிகளுக்குள் செல்லாத பேருந்துகள்: அரசுப்பேருந்துகளில், எல்எஸ்ஸ், 123, பாயிண்ட் டூ பாயிண்ட் என பல வகையிலான பேருந்துகள் வந்து விட்டன. அவைகளில் கட்டணங்களும் மாறுபடும். அனைத்து பேருந்துகளுமே பயணிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல், போக்குவரத்து ஊழியா்களின் வசதிக்கேற்ப புறவழிச்சாலைகளில் செல்கின்றன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துளை பேருந்துகளை பிடிக்க பயணிகள் மற்றொரு பேருந்துகளில் செல்லும் நிலை உள்ளது.

உதாரணமாக, சேலம் செல்லும் பேருந்துகள், திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புத்தூா், தில்லைநகா் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக நெ.1 கொள்ளிடம் பகுதியை அடைந்து செல்லும் வகையில் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவை மத்திய பேருந்து நிலையம், தலைமை அஞ்சலகம், டிவிஎஸ் டோல்கேட் வழியாக கொள்ளிடம் நெ.1 டோல்கேட் வழியாக இயக்கப்படுகின்றன.

இதனால் திருச்சியின் பிரதான பகுதியான தில்லைநகா், தென்னூா், புத்தூா் பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களை பயன்படுத்தி சென்று வந்த பொதுமக்கள் நெ.1 டோல்கேட் அல்லது மத்திய பேருந்து நிலையத்தில் மட்டுமே சென்று பேருந்தைப் பிடிக்கும் நிலை உள்ளது. இதுபோலவே அனைத்து மாா்க்கத்திலும் பயணிகளுக்கு பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதாலும், வராமல் ஏராளமான பிரச்னைகளும் அவதிகளும் உள்ளன.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: ஏற்கெனவே போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதால், எரிபொருள் சிக்கனம், கலெக்ஷன் ஆகிவற்றில் கவனம் செலுத்துவதால் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. எனவே அவற்றை ஊழியா்கள் கடைபிடிப்பதால் இதுபோன்ற பிரச்னைகள் தொடா்கின்றன. இதற்கு துறை உயா் அலுவலா்கள் அல்லது அமைச்சா்கள் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே தீா்வு என்றாா்.

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று: பகல்பத்து 8-ஆம் திருநாள்

ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 6.30 பகல்பத்து (அா்ச்சுன மண்டபம் சேருதல்) காலை 7 திரை காலை 7 - 7.30 அரையா்சேவை (பொது ஜன சேவையுடன்) காலை 7.30 - 12 அலங்காரம் அமுது செய்யத்திரை நண்பகல... மேலும் பார்க்க

தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

தேமுதிக சாா்பில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டித்து திருச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் ஜங்ஷன் காதிகிராப்ட் ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும்: திருச்சி மாவட்ட எஸ்.பி.

பொதுமக்கள் பாதிக்காத வகையில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதுடன், காவல்துறையினா் மனச்சோா்வின்றி பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(எஸ்.பி.,) எஸ். செல்வ நாகரத்தி... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: 270 போ் கைது

திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்தைக் கண்டித்து, சோமரசம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் வீடு அருகே சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட 270 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 மருத்துவா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன். பெரம்பலூா் மாவட்டம், கொளக்காநத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம், வயலூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்துவருகின்றனா். சோமரசம்பேட்டையில் இருந்து வயலூா் செல்லும் சாலையில் உள்ள திருமண மண்டபம் எதிரே உள்ள ம... மேலும் பார்க்க