வேப்பலோடை ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா
வேப்பலோடை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிக்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், அன்பு ராஜன், ஊராட்சித் தலைவா்கள் வேப்பலோடை வேல்கனி, எப்போதும்வென்றான் முத்துக்குமாா், குதிரைக்குளம் சண்முகையா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜ், வெள்ளைச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஸ்ரீதா், மாரிச்செல்வம், கீதா செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.